செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

இங்கும் இனி எரிமலைகள் சீறும் !

கட்டடங்கள் முளைக்கிறது 
கரும் வீதி அகண்டு 
பெரும் அபிவிருத்தி நடக்கிறதாம். 
அரும் வளமாம் 
பெரு மரங்கள் அடியோடு சாய்த்து 
வளம் தரு நிலங்கள் மாய்த்து 
மாய வித்தை நடக்கிறது. 
மாரி பொய்த்து மாவளம் அழிந்து
 இயற்கை நலிகிறது.
இங்கும் இனி எரிமலைகள் சீறும் 
புவி பிளந்து புல்லரிக்கும் 
கடல் வந்து தரை தின்னும். 
இரை இன்றி இருப்பின்றி வனவாசி அழியும் 
இனியும் இருக்காது இயற்கை பொறுக்காது 
குறுகிய வட்டத்துள் நம்மவர் திட்டங்கள்.

6 கருத்துகள்:

 1. புரட்சிகர கவிதை !
  வலைப்பூ வடிவமைப்பும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. கவி அழகன்
  தங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள்

  பதிலளிநீக்கு
 3. வாணி
  வருக தங்கள் கருத்துக்களை தருக
  மிக்கநன்றிகள்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் நிதர்சனன்! உங்களது கவியருவி வலைத்தளம் மிகவும் அருமையானதொரு முயற்சி ,இன்னும் தொடர வாழ்த்துக்கள்!!!
  அதோடு, உங்களது ஆரம்பகால கவிதைகளையும் கவியருவியில் இடுகையிடலாமே!!, {எதிர் பார்க்கிறோம்} உங்களது புரட்சிக்கவிகள் இன்னும் முழங்கட்டும் ;நிதர்சனமாக!!!!.............

  பதிலளிநீக்கு
 5. நன்றிகள் கோகிலா !
  உங்கள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும்.

  பதிலளிநீக்கு