செவ்வாய், 30 அக்டோபர், 2012

திருட்டு வழிகாட்டிகளோடு........நேற்றுவரை 
நெருப்புப் பக்கங்களில் 
இருப்புக்கொண்ட நம் 
விருப்பான வரலாறு
திருட்டு வழிகாட்டிகளோடு
இருட்டு ப்பள்ளங்களில் இன்று 
குருட்டுப் பயணம் செய்கிறது .

வியாழன், 23 பிப்ரவரி, 2012

இருந்துபார் இனியொரு பிரளயம் கருக்கொள்ளும்.


கருமுகில் கலைக்க
வானத்தில் ஒரு
புயல் வரும்
இன்று இடிந்து விழ்ந்தவையே
நாளை எழுந்து நிமிரும்கோபுரங்கள்.
விழ்ச்சியும், எழுச்சியும்எமது
சாதனைகளுக்கான
வழிகாட்டிகள்.
முதிர்ந்தவை உதிர்வதும்
புதியவை தளிர்ப்பதும்
இயற்கையின் நியதி.
இருந்துபார் இனியொரு
பிரளயம் கருக்கொள்ளும்
.

புதன், 22 பிப்ரவரி, 2012

வாழ்வு என்பது


உழைத்த கரங்கள்
 உரமிழந்து போயின.
கற்பனைக் கோட்டைகள்
 கடலோடு போயின 
வாழ்வு என்பது 
ஏமாற்றங்களோடு மட்டும்தானா?
இல்லை ஏமாற்றங்களே 
உனக்கு வழிகாட்டி
 எடுத்துவை கால்களை
 ஏமாற்றப் படிதாண்டி...........

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கதிரவன் ஒளிக்காய் காத்திருக்கும் தாமரைகள்...வீணை கைக்குவர 
விரல்கள் ஊனமாகியது .
விதியின் வழியில் 
கதியிழந்து கலங்கும் 
பதியற்ற இனமாய்....
இன்றும் இவர்கள் 
கதிரவன் ஒளிக்காய் 
காத்திருக்கும் தாமரைகள்...... 

சனி, 18 பிப்ரவரி, 2012

சனி, 11 பிப்ரவரி, 2012

உறங்காத உண்மைகள் ......

பேச நினைத்த 
வார்த்தைகளை 
பேச முடியாத
அவலம் ,
அடக்குமுறை. 
நிகழ்த்த வேண்டிய 
சாதனைகளை 
நிகழ்த்த முடியாத 
வேதனை,
வெறுப்பு,
இன்றும், என்றும் 
மனதில் 
உறங்காத உண்மைகள் ...... 

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

இங்கும் இனி எரிமலைகள் சீறும் !

கட்டடங்கள் முளைக்கிறது 
கரும் வீதி அகண்டு 
பெரும் அபிவிருத்தி நடக்கிறதாம். 
அரும் வளமாம் 
பெரு மரங்கள் அடியோடு சாய்த்து 
வளம் தரு நிலங்கள் மாய்த்து 
மாய வித்தை நடக்கிறது. 
மாரி பொய்த்து மாவளம் அழிந்து
 இயற்கை நலிகிறது.
இங்கும் இனி எரிமலைகள் சீறும் 
புவி பிளந்து புல்லரிக்கும் 
கடல் வந்து தரை தின்னும். 
இரை இன்றி இருப்பின்றி வனவாசி அழியும் 
இனியும் இருக்காது இயற்கை பொறுக்காது 
குறுகிய வட்டத்துள் நம்மவர் திட்டங்கள்.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

நான்

கட்டுக்குள் அகப்படாமல் 

கற்பனைச் சிறகடித்து

கானம் பாடும் வானம்பாடி-நான் 

மெட்டுக்கு உருக்கொடுத்து 

மெல்லவே முறுக்கெடுத்து


முகம் நிமிர்த்தி 


கதிர்க்கரங்களால் 

ஒளிச்ச்சாயம் கொண்டு 

ஒரு கவிப்பிரசவத்துக்காய் 


காத்திருக்கிறேன்.

சனி, 2 ஜூலை, 2011

ஜனநாயகம்

பேசத்தெரிந்த ஊமை - நீ 

உணர்வுகள் அடக்கு. 
உரிமைகளை மற.
அடிமையாய்மாறு.
கொடி பிடிக்கப் பழகு .
கோசமிட கற்றுக்கொள். 
வேசமிட அறி. 
வேறென்ன 
வேண்டும் உனக்கு?
அத்தனையும் 
உன்னருகில். 
ஆகா!.....
அழகான வாழ்வுனக்கு,  
அழியுதையா ஜனநாயகம். 
கிழியுதையா சமதர்மம்.